அமெரிக்காவில்  உட்டா மாகாணத்தின்  சால்ட் லேக் நகரில் வெள்ளிக்கிழைமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும்  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் கொல்லப்பட்ட குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அனைவரும் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார்  சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபர் தொடர்பிலும் மேலதிக தகவல்களை  வெளியிடவில்லை.

எனினும் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்த மேலதிக விசாரனையை பொலிஸார் தொடர்ந்துள்ளனர்.