(சசி)

முன்னிலை சோசலிஷக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு ஆரயம்பதி சந்தைக்கு   அருகாமையில்  முன்னிலை சோசலிஷக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று பொதுமக்களினடம் இந்த கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும், அவருக்கு குடியுரிமையை வழங்குமாறும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குமார் குணரட்னத்திற்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி ஒரு வருட சிறைத் தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதித்து கேகாலை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.