புகையிரதமொன்றின் கூரையில் ஏறிய மொரோக்கோ குடியேற்றவாசியொருவர் அதி சக்தி வாய்ந்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மின் இணைப்பைத் தவறுதலாக தொட்டதால் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் கிரேக்க மசிடோனியா எல்லையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் எரிந்து கருகிய அந்நபரின் சடலத்தை அங்கிருந்த ஏனைய குடியேற்றவாசிகள் மீட்டு தரைக்கு எடுத்து வந்தனர்.
தரித்திருந்த அந்த புகையிரதத்தின் கூரையில் குறிப்பிட்ட நபர் எதற்காக ஏறினார் என்பது அறியப்படவில்லை.
வறிய நாடுகளிலிருந்து பொருளாதார அனுகூலத்தைப் பெறும் நோக்காக குடியேற்றவாசிகள் பலர் வருவது அதிகரித்துள்ளதையடுத்து மசிடோனியா தனது எல்லைப் பிராந்தியத்தை மூடிய நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மசிடோனியா போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகளைமட்டுமே எல்லையைக் கடந்து தனது நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதித்து வருகிறது.
இந்நிலையில் குறிப்பிட்ட மொரோக்கோ குடியேற்றவாசி, தரித்திருந்த அந்தப் புகையிரதத்தின் கூரையில் முன்கூட்டியே மறைந்திருந்து பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இதே வழிமுறையில் புகையிரதத்தின் கூரையில் ஏறிய 24 வயது மொரோக்கோ குடியேற்றவாசியொருவர் மின்சார இணைப்பொன்றைத் தொட்டதால் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM