(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கப் பெறாமல் போன வாக்குகளை பெற்றுக் கொடுத்து அவரை பலமடையச் செய்வதற்கு நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டியது அத்தியாவசியமாகும். பொதுத் தேர்தலில் முஸ்லிம் , தமிழ் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அமைப்போம் என இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமையால் பாரிய பின்னடைவுக்கு முகங்கொடுத்துள்ளது. சு.க - ஐ.தே.க இணைவை விரும்பாத சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றனர்.
தற்போது எமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடையாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறேனும் முயற்சித்து தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மேலும் பலத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காகும்.
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற வாக்குகளையும் முடிந்தளவு பெற்றுக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM