பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பம் தென்மாகாணத்திலுள்ளஹுங்கமவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் வெறொரு வேன் ஒன்றின் மீது பட்டதிலேயே அதில் பயணித்த குறித்த பிக்கு உரிழந்துள்ளார்.

21 வயதுடைய பிக்குவே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.