ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­களை பலப்­ப­டுத்த வேண்­டு­மென்ற எதிர்­பார்ப்­பினை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு வருகை தரு­மாறு முடிக்­கு­ரிய இள­வ­ரசர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வுக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

அபு­தாபி அரசின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் படை­களின் பிரதித் தலைவர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவுக்கு வாழ்த்து தெரி­வித்­துள்ளார்.

இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­களை பலப்­ப­டுத்த வேண்­டு­மென்ற தனது எதிர்­பார்ப்­பினை உறு­திப்­ப­டுத்தும் அதே­வேளை, ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு வருகை தரு­மாறு அவர்  ஜனா­தி­ப­திக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

 இள­வ­ர­சரின் வாழ்த்­துக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்த ஜனாதிபதி , அவரது அழைப்பினையும் ஏற்றுக்கொண்டார்  என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.