தொடரை வெல்வது யார்? - தீர்க்கமான போட்டி இன்று!

Published By: Vishnu

19 Jan, 2020 | 11:34 AM
image

இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் ஒருநாள் தொடரின் இறுதியுமான கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் பெங்களூரில் இடம்பெறவுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியஅணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. 

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் 3 ஆவதும் மற்றும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

முந்தைய ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா தொடரை வெல்லுமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இழந்தது. 

அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக இருக்கிறது. இதனால் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த இறுதி வரை எல்லா துறையிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05