ஏமனில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலில் 25 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாட்டின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் உள்ள இராணுவ குடியிருப்புகள் மீதே இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 25 வீரர்கள் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொருப்பேற்காத நிலையில் , அதேவேளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டில் கடந்த சில காலமாக பல்வேறு தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.