பிரித்­தா­னி­யாவில் ஒரு வயது நிரம்­பிய குழந்­தை­யொன்று ஆவி­யுடன் விளை­யா­டு­வதை குழந்­தையின் தாய் காணொ­ளி­யாக பதிவு செய்­துள்ளார். 

ஜார்­ஜியா ஹூசன் என்ற குறித்த தாய், குழந்தை தனி­யாக அறையில் யாரு­டனோ பேசி­ய­வாறு விளை­யாடிக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்­துள்ளார். அங்கு யாரு­மில்­லாத நிலையில் குழந்தை பேசு­வதை கவ­னித்த அவர் அதை காணொ­ளி­யா­கவும் பதிவு செய்­துள்ளார். 

அந்த காணொ­ளியை அவ­தா­னிக்கும் போது குழந்தை சுவரை நோக்கி பேசு­வ­தையும் அங்கே ஒரு வெள்ளை உருவம் நகர்­வ­தையும் அவ­தா­னித்­துள்ளார். 

பின்னர் தனது குழந்தை தொட்­டிலின் பின் பக்கம் நகர்­வ­தையும் அவள் நகர்ந்ததும் அவளை நோக்கி ஒரு வெள்ளை உருவம் நகர்­வ­தையும் அவ­தா­னித்­துள்ளார். 

இது தொடர்பில் குழந்­தையின் தாய் குறிப்­பி­டு­கையில், தங்­க­ளது வீட்டுக்கு பக்­கத்தில் அவ­ரு­டைய நெருங்­கிய நண்பர் ஒருவர் வசித்து வந்­த­தா­கவும் ஆறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் அவர் திடீ­ரென இறந்து விட்­ட­தா­கவும் அவர்தான் தற்­போது தனது குழந்­தையை பார்க்க வரு­வ­தாக நம்­பு­வ­தா­கவும் தெரிவித்­துள்ளார்.

மேலும், ஒருமுறை அந்த நண்­பரின் புகைப்­ப­டத்தை குழந்­தை­யிடம் காட்­டிய போது, குழந்தை பயப்­ப­டாமல் அந்த புகைப்­ப­டங்­களைப் பார்த்து  கைகொட்டி சிரித்து மகிழ்ந்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

ஆகவே, தன்­னு­டைய நண்பர் தான் குழந்தையை பார்க்க வருவதாகவும், அவருடன்தான் குழந்தை விளையாடுவதாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.