ஜி.எஸ்.பி.பிளஸ் (GSP+) வரி நிவாரணம் 2023 ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த ஆணைக்குழுவின் இலங்கை - மாலைதீவிற்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவரும், அரசியல் வர்த்தக மற்றும் தொடர்பாடல் அதிகாரியுமான தொர்ஸ்ரன் பற்க்வேற் (Thosrsten bargfarde) தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வரையில் இந்த விரி நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பத்துடன் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உப தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அவர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்பொழுது இது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறினார்.

ஜி.எஸ்.பி.பிளஸ் (GSP+) வரி நிவாரணம் கூடுதலாக இலங்கையின் ஆடைத் தொழில்துறை ஏற்றுமதிக்கே கிடைத்துள்ளது. ஆடை தொழில்துறையில் 60 சதவீதமாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.