சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை குறைவடைந்தமையினால் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 888 மில்லியன் டொலராக கடந்த வருடத்தில்குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ் வீழ்ச்சிக்குமசகெண்ணெய் ஏற்றுமதி பிரதான காரணியாக இருந்ததுடன் தங்கம் வைரம் மற்றும் மாணிக்கம் என்பனவும் பங்களிப்பு வழங்கின.கப்பல் மற்றும் விமானங்களுக்கு மசகெண்ணெய் விநியோக வீழ்ச்சி மற்றும் பொதுவான ஏற்றுமதி விலைவீழ்ச்சி என்பவற்றின் காரணமாக கடந்த பெப்ரவரி மாதத்தில் மசகெண்ணெய் உற் பத்தி ஏற்றுமதியானது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 55.6 சதவீத வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
அதே போல் மாணிக்கம், வைரம் மற்றும் தங்க நகை ஏற்றுமதி வருமானமும் 33.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள் ளதுடன் பல சரக்குபொருட்கள் ஏற்றுமதி வருமானமும் 34.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் சர்வதேச் சந்தையில் ஏற்பட்ட குறைந்த கேள்வி மற்றும் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பவற்றின் காரணமாக தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானமும் இக்காலப்பகுதியில் வீழ்ச்சியை பதிவு செய்து பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி வருமான வீழ்ச்சிக்கு பெரும் பங்கினை வகித்துள்ளது. அந்த வகையில் பெப்ர வரிமாத்தில் தேயிலை 6.8 சதவீத வீழ்ச்சியையும் இறப்பர் 10.7 சதவீத வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
இதே வேளை மொத்த ஏற்றுமதியில் 52 சதவீத பங்களிப்பை வழங்கும் ஆடை ஏற்றுமதி இக்காலப்பகுதியில் 10.3 சதவீத வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதுடன் இது முழு ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்சியைகட்டுப்படுத்த துணைபுரிந்தது. இக்காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதியில் முறையே 11.7 சதவீத மற்றும் 8.7 சத வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கடந்த பெப்ரவரி மாதத்தில் இறக்குமதிசெலவு 1,439 மில்லியன் அமெரிக்க டொலராக 5.9சதவீதத்தால் வீழ்ச்சிய டைந்துள்ளது. இவ் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக மசகெண்ணெய் விலையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக அமைந்தது. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்வரி மாதத்தில் 69.2டொலராக இருந்தஒரு பெரல் மசகெண்ணெயின் விலைகடந்த பெப்ரவரி மாதத்தில் 35.6 டொல ராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM