துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அண்மைய வரி திருத்தங்களைத் தொடர்ந்து, இறக்குமதிக்கான கட்டணங்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன, எனவே இது துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை 2020 ஜனவரி 1 முதல் அமல்படுத்தியுள்ளதாக நிதியைமச்சு தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி மூலம் இலங்கைக்கு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.