இலங்கை “ஏ” அணியில் அக்குறணையைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணியிலேயே இவர் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணி விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை “ஏ” அணியின் தலைவராக அஷான் பிரியஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இக் குழுவிலேயே அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ,இடதுகை வேகப்பந்து வீச்சாளருமான மொஹமெட் டில்ஷாட் இணைக்கப்பட்டுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான மொஹமெட் டில்ஷாட் , மணிக்கு சுமார் 130 கிலோ மீற்றருக்கும் அதிகமான வேகத்தில் மிகத்துல்லியமாக பந்து வீசக்கூடிய ஆற்றல் படைத்தவர்.

14 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷாட் , 42 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை “ஏ” அணி விபரம் வருமாறு,

1. அஷான் பிரியஞ்சன்  –  அணித் தலைவர்

2. மஹேல உதவத்த

3. உதார ஜெயசுந்தர

4. பானுக ராஜபக்ஷ

5. நிரோஷன் டிக்வெல்ல

6. கித்ருவான் விதானகே

7. அஞ்சலோ பெரேரா

8. மினோத் பானுக

9. சரித் அசலங்கா

10. சசித் பத்திரண

11. திசர பெரேரா

12. லஹிறு கமகே

13. கசுன் ராஜித்த

14.மொஹமெட்  டில்ஷாட்

15. அசித பெர்னாண்டோ

16. ரமித் ரம்புக்வெல்ல

17. லக்ஷன் சண்டகேன்