செல்லக் கதிர்காமம் பகுதியில் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை செல்லக் கதிர்காமம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன், கைதானவர்களை இன்றைய தினம் திசாமஹராம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.