பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஸிம்பாப்வேக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சி குழு போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 9 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.

மழையினால் அவ்வப்போது தடைப்பபட்ட இப் போட்டியில் 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடியபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. போட்டி மீண்டும் தொடர்ந்தபோது 22 ஓவர்களில் 132 ஓட்டங்கள் வெற்றி இலக்கு என திருத்தப்பட்ட வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.

பங்களாதேஷ் 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டு அதன் பின்னர் தொடரவில்லை. இதனை அடுத்து டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எண்ணிக்கை சுருக்கம்

ஸிம்பாப்வே 28.1 ஓவர்களில் 137 - 6 விக். (டடிவனாஷே மருமானி 31, மில்டன் ஷும்பா 28, இம்மானுவேல் பாவா 27, டேன் ஷடென்டோர்வ் 22 ஆ.இ., ரக்கிபுல் ஹசன் 19 - 1 விக்.)

பங்களாதேஷ் (திருத்தப்பட்ட இலக்கு 22 ஓவர்களில் 132) 11.2 ஓவர்களில் 132 - 1 விக். (பர்வீஸ் ஹொசெய்ன் இமொன் 58 ஆ.இ., மஹ்மதுல் ஹசன் ஜொய் 38 ஆ.இ., தன்ஸித் ஹசன் 32) ஆட்டநாயகன்: பர்வீஸ் ஹொசெய்ன் இமொன்.