பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

இப் போட்டியில் 28.5 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 28.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

ஒலி வைட் (80 ஓட்டங்கள்), ரய்ஸ் மரியு (51 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் 119 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பேர்கஸ் லெல்மான் 31 ஓட்டங்களுடனும் வீலர் க்றீனோல் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இக் குழுவில் இடம்பெறும் இலங்கைக்கும் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி புளூம்பொன்டெய்னில் நாளை நடைபெறவுள்ளது.