ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் 30 இலட்ச ரூபா பெறுமதியுடைய காசோலை ஒன்றினை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளித்தார்.

இந்த நிதி நத்தால் கரோல் நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோரின் நலன்பேணலுக்காக செலவிடுவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர் ஐவன் வித்தானகமகே ஆகியோர் குறித்த காசோலையினை பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச செயற்பாடுகள் பற்றிய ஆலோசகர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.