வீட்டினுள் புகுந்த திருடர்கள் கத்தி முனையில் அச்சுறுத்தி எட்டுப் பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த  சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் பருத்தித்துறை புலோலியில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், வீட்டினுள் புகுந்த திருடர்கள் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, வீட்டிலிருந்தவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.