இரண்டு வருடங்களிற்கு முன்னர் மகளை பாலியல் வன்முறைக்குஉட்படுத்திய நபர்கள் பிணையில் விடுதலையான நிலையில் தாயை அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவின் கான்பூரில் இடம்பெற்றுள்ளது.

2018 இல் 13 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்ட நால்வர் உள்ளுர் நீதிமன்றத்தின் பிணை மூலம் விடுதலையான பின்னர் சிறுமியின்தாயை அடித்துக்கொலை செய்துள்ளனர்.

பிணையில் விடுதலையான குற்றவாளிகள் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று வழக்கை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளனர்,அந்த குடும்பத்தவர்கள் அதற்கு மறுப்புதெரிவித்தவேளை அவர்களை மோசமாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தாயும் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்ட நிலையில் தாய் உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோவொன்று நபர் ஒருவர் பெண்மணியொருவரை காலால் மிதித்து தாக்குவதை காண்பித்துள்ளது.

இது தொடர்பில் ஐவர் கைதுசெய்யப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.