இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டினை ஆட்டமிழக்க செய்த பின்னர் நடந்துகொண்ட விதத்திற்காக  தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கஜிசோ ரபாடாவிற்கு ஐசிசி நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளமைக்கு பல முன்னாள் கிரிக்கெட்  பிரபலங்கள் கண்டனமும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர்.

ரபாடாவிற்கு எதிரான இந்த தடை அபத்தமானது என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டை ஒரு விளையாட்டைவிளையாடும்உணர்வோடு விளையாடவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டமைக்காக ரபாடாவிற்கு தடை விதிப்பது அபத்தனமானது என பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

ரபாடாவின் வேட்கையை நான் ரசிக்கின்றேன் என தெரிவித்துள்ள பிரெட்லீ இந்த முடிவை ஏற்க முடியாது ஐசிசி என குறிப்பிட்டுள்ளார்.

ரபாடாவிற்கு எதிரான தடையை  இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹ_சைனும் விமர்சித்துள்ளார்.

அந்த பந்து வீசப்பட்ட சூழ்நிலை குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் 33 செல்சியஸ் வெப்பம்,உயர்ந்த ஈரப்பதம்,பந்து வீச்சாளர்களிற்கு சாதகமற்றஆடுகளம்,புதுபந்து வழங்கப்படாத நிலை ஆகியவற்றின் மத்தியில் ரபாடா இங்கிலாந்துஅணியின் தலைவரை ஆட்டமிழக்க செய்துள்ளார் என்பதை நாசர் ஹ_சைன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்றைய நாளின் மிகச்சிறந்த பந்தை ரபாட வீசினார் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டார்,  என குறிப்பிட்டுள்ள அவர் ரபாடா இல்லாததால் அடுத்த டெஸ்டிற்கு இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.

எதிரணியின் மிகச்சிறந்த வீரரை ஆட்டமிழக்க செய்ததை கொண்டாடியமைக்காக ரபாடாவிற்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டமை பைத்தியக்காரத்தனமானது என இங்கிலாந்து அணியின் மற்றொரு முன்னாள் தலைவர் மைக்கல்வோகன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.