மன்னாரிற்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் விமல் வீரவன்ச காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) திடீர் விஜயம் செய்திருந்தார்.

அங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு, அங்குள்ள பிரச்சினைகள் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

மேலும் உப்பு பொதி செய்யும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.

இதன் போது அங்கு கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்தனர்.

குறிப்பாக குறித்த உப்பு உற்பத்தி நிலையத்தில் அதிகமான பெண் ஊழியர்களே கடமையாற்றுவமாகவும்,கடினமான வேலைகளை தாங்களே செய்வதாகவும் தெரியப்படுத்தினர்.

குறித்த பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.