பொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்

பேக்கரி பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வெட் வரிச் சலுகையைப் பெற்றுக்கொடுப்பது இல்லை என உள்நாட்டு வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெட் வரிச் சலுகை பொது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை எனக் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே தெரிவித்துள்ளார்.

ஆகவே பொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.