திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கறக்கஹவெவ பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதான அஜித் குணசேகர என்ற பொலிஸாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கறக்கஹவெவ லுனுகல விகாரிக்குப் பின்புறமாக உள்ள காணியில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  தந்தையும் மகனும் காவலில் ஈடுபட்டுவந்த போது தந்தை சேனைக்குப் பின்புறம் சென்று கொண்டிருந்த வேளை யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில்  சிக்கியதையடுத்து  சத்தம் இட்டுள்ளார். 

இந்நிலையில், தன்னுடன் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனது மகன் சத்தமிட்டதைக் கேட்டுச் சென்று மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தந்தை பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கினார். 

உயிரிழந்த சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. எஸ். எம். ரூமி சென்று பார்வையிட்டதுடன் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் சடலத்தைக் கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார். 

சடலம் தற்பொழுது பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.