வளர்ப்பு நாயுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை அந்நாய் கடித்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முகத்தில் தையல் போடப்பட்டுள்ளது. 

அர்ஜெண்டினாவில், லாரா சன்சோன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் வர்க்க நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்துள்ளது. 

இதனால் படுகாயமடைந்த அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர்   உள்தையல், வெளிதையல் என சுமார் 40 தையல் போடப்பட்டுள்ளது. செல்ல பிராணிகளுடன் செல்ஃபி எடுக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதில் அதிக கவனம் தேவை. 

இது தொடர்பாக லாரா அர்ஜென்டினா அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் இவ்விதம் செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இவ்விதம் நடந்து கொண்டதா ? எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.