ஹகுரங்கெத்த - மல்லஸ் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில்,  பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் குறித்த நீர்த்தேக்கத்திற்கு நீராடிக்கொண்டிருந்த போதே  மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.