சீனாவில் பரவிவரும் மர்ம வைரஸ் நிமோனியா காய்ச்சல் குறித்து சீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கொழும்பு மற்றும் பிற நாடுகளில் உள்ள சுகாதார அமைச்சகத்திற்கு அடிக்கடி வருகைதரும் சீன சுற்றுலாப் பயணிகள் மற்றும் சீன பிரஜைகள் மீது மர்ம வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.

குறித்த நிமோனியா காய்ச்சல்  வுஹானை மையமாகக் கொண்டிருந்தாலும், தாய்லாந்தில் இரண்டு பேரும் மற்றும் ஜப்பானில் ஒருவரும்  நோய் தாக்கத்திற்கு உள்ளாமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலே,இலங்கையிலிருந்து சீனாவிற்கு செல்லும் பிரஜைகளுக்கு விசேட சுகாதார ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நிமோனியா காய்ச்சலுக்கான காரணம் ‘சார்ஸ்’ நோயை உருவாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த கொரோனா வைரஸ்கள் என சீன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவை விலங்குகளிடமிருந்து மனிதர்களிடையே பரவும் கொரோனா வைரஸ்கள் என கூறப்படுகின்றது.

இதுவரை வைரஸ் தாக்கத்தினால் மத்திய சீன நகரமான வுஹானில் இருவர்  உயிரிழந்துள்ளனர்.

மேலும், சீனாவில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து நிபுணர்களின் கருத்துபடி   1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  மதிப்பிட்டுள்ளது.