எம்.ஜி.ஆர். இன் 103ஆவது பிறந்த நாள் நினைவு தினம்

Published By: Daya

18 Jan, 2020 | 11:00 AM
image

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்தியப் பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 103ஆவது பிறந்த நாள் தினைவு நேற்று யாழில் கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனும் நண்பருமான யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கதின் ஏற்பாட்டில் இந்த பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன.  

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குக் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்திப் பிறந்த தினத்தினை நினைவு கூர்ந்தார். 

அதனைத் தொடர்ந்து முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலி  -கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ராசேந்திரம் செல்வராஜா,  மற்றும் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டு எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர். 

குறித்த நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் கோப்பாய் சுந்தரலிங்கம்  தனது  சொந்த நிதியில் தெரிவு செய்யப் பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் இனிப்பு பண்டங்களையும் பரிமாற்றினார். 

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தனது சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் பிறந்த, இறந்த தினங்களை அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலின் பூர்வீக...

2023-10-02 18:20:11
news-image

இலண்டனில் கலாக்ஷேத்ரா பாணியிலான பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-10-01 18:35:44
news-image

வட்டக்கச்சி வினோத்தின் 'வேர்கள் வான் நோக்கின்'...

2023-09-30 16:45:28
news-image

வடக்கு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும்...

2023-09-30 17:28:30
news-image

வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள்...

2023-09-30 15:15:17
news-image

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின்...

2023-09-30 13:18:36
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-30 13:16:49
news-image

யாழ். சுதுமலையில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும்...

2023-09-30 13:17:21
news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35