பல்வேறு காரணங்களுக்காகச் சட்ட ரீதியற்ற முறையில் சேவையிலிருந்து விலகிச் சென்ற முப்படை களின் உறுப்பினர்களுக்கு மீண்டும் படையினரிடம் சரணடைவதற்கான பொதுமன்னிப்பு கால மொன்றை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கட்டளைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய எதிர்வரும் 2020 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 07 நாட்கள் பொது மன்னிப்பு காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
2019.09.30 ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிச் சென்ற முப்படை உறுப்பினர்களுக்கே இந்த பொதுமன்னிப்பு காலம் ஏற்புடையதாகும். 
இந்த பொதுமன்னிப்பு காலத்திற்குள் சட்டரீதியாகப் படைகளிலிருந்து விலகிச் செல்லவோ அல்லது மீண்டும் முப்படைகளில் இணைந்து தமது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றவோ இவர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படும். ­­­­