இந்­திய கிரிக்கெட் சபையின் இந்த ஆண்­டுக்­கான வரு­டாந்­திர ஒப்­பந்­தத்தில் இருந்து டோனி நீக்­கப்­பட்­டதால் அவரின் சர்­வ­தேச கிரிக்கெட் முடிந்து விட்­ட­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் டோனி ஏற்­க­னவே இந்­தி­யா­வுக்­கான அவ­ரது கடைசி போட்­டியை விளை­யாடி விட்டார் என்று ஹர்­பஜன் சிங் தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்து ஹர்­பஜன் சிங் கூறு­கையில், பொது­வாக இதன் மூலம் டோனியின் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி முடி­வுக்கு வந்­துள்­ளது. உலகக் கிண்ண அரை­யி­றுதிப் போட்­டிக்­குப்பின் அவர் மீண்டும் அணியில் இடம் பெறாமல் இருக்­கிறார். உலகக் கிண்­ணம்தான் இந்­தி­யா­வுக்­காக அவர் விளை­யா­டிய கடைசிப் போட்­டி­யாக இருக்கும் என நான் கேள்­வி­ப்பட்டேன். தானா­கவே ஏன் அணியில் இடம் பிடிக்­க­வில்லை என்­ப­தற்­கான மன­நி­லையை அவர் ஏற்கனவே தயார் படுத்திக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.