பாராளுமன்றத் தேர்தலுக்கு சஜித் தலைமையில் பொதுக்கூட்டணி: சபாநாயகரையும் உள்ளீர்க்க முஸ்தீபு

Published By: J.G.Stephan

18 Jan, 2020 | 09:59 AM
image

(ஆர்.யசி)

ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியின் தலைமை விவ­கா­ரத்தில் இழு­பறி நிலை தொடர்ந்து வரு­வ­தனால் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை சஜித் பிரே­ம­தாச தலை­மையில் புதிய பொதுக் கூட்­டணி அமைத்து புதிய சின்­னத்தில் சந்­திப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சஜித் பிரே­ம­தாச தலை­மையில் பரந்­து­பட்ட கூட்­டணி அமைத்து அந்தக் கூட்­ட­ணியில் ஐக்­கிய தேசியக் கட்சி உட்­பட ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் அனைத்துக் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்கி புதிய கட்­சி­க­ளையும் உள்­ளீர்த்து தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கு நேற்று நடை­பெற்ற உயர்­மட்டக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.  

பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நேற்று பிற்­பகல் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் பாரா­ள­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் காசிம், ரஞ்சித் மத்­து­ம­பண்­டார,சரத்­பொன்­சேகா, அஜித்பி பெரேரா, ரவீந்­திர சம­ர­வீர ஆகி­யோரும் கூட்டுக் கட்­சி­களின் சார்­பாக பாரா­ளு­ம­தன்ற உறுப்­பி­னர்­க­ளான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சம்­பிக ரண­வக்க, ராஜித சேன­ரத்ன ஆகியோர் கலந்­து­கொண்­டனர். 

இந்தக் கூட்­டத்­தி­லேயே பரந்­து­பட்ட பொதுக் கூட்­டணி அமைத்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கள­மி­றங்­கு­வது தொடர்பில் தீர்­மா­னிக்கப் பட்­டுள்­ளது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­துவம் தொடர்­பாக அக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று முன்­தினம் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்டம் இடம்­பெற்­றி­ருந்­தது. இந்தக் கூட்­டத்தில் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு ரணில் விக்­கி­ம­சிங்க இணக்கம் தெரி­விக்­க­வில்லை. 

அத்­துடன் பிர­தமர் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்­கு­வ­தற்கும் அவர் இணங்­க­வில்லை. வாக்­கெ­டுப்பின் மூலம் தலை­மையை தெரி்­வு­செய்­யு­மாறு சஜித் பிரே­ம­தாச அணி­யினர் கோரி­ய­போ­திலும் அதற்கும் இணங்­க­வில்லை. இந்த நிலையில் முடி­வெ­துவும் எடுக்­கப்­ப­டாது பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்டம் முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. 

இத­னை­ய­டுத்தே ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமை விவ­கா­ரத்­துக்கு தீர்வு காணப்­ப­டா­மை­யினால் அடுத்­த­கட்­ட­மாக என்ன நட­வ­டிக்கை எடுப்­பது என்­பது தொடர்பில் சஜித் அணி­யி­னரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சித் தலை­வர்­களும் நேற்று பிற்­பகல் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போதே சஜித் பிரே­ம­தாச தலை­மையில் பொதுக்­கூட்­டணி அமைத்து புதிய சின்­னத்தில் கள­மி­றங்­கு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. 

இந்தப் பொதுக்­கூட்­ட­ணியில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வையும் உள்­வாங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. நேற்று நடை­பெற்ற கூட்­டத்­தை­ய­டுத்து சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மனோ கணேசன் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். 

இன்­றைய தினம் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் சபா­நாயர் கரு ஜய­சூ­ரி­ய­வுக்­கு­மி­டையில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. இந்தச் சந்­திப்பில் இணக்கம் காணப்­ப­டு­மனால் புதிய பொதுக் கூட்­ட­ணியில் சபா­நா­ய­ரையும் உள­ளீர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை கரு ஜய­சூ­ரி­ய­வுக்கு வழங்­கு­வ­தற்கு அக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணங்­கு­வா­ரானால் அதற்கு இணக்கம் தெரி­விப்­ப­தற்கும் சஜித் அணி­யினர் திட்­ட­மிட்­டுள்­ளனர். 

பொதுக் கூட்­ட­ணியின் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிப்­பது என்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக கரு ஜய­சூ­ரி­யவை நிய­மிக்க ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணங்­கினால் அதனை ஏற்­றுக்­கொண்டு கூட்­ட­ணிக்குள் ஐக்­கிய தேசியக் கட்­சியை முழு­மை­யாக இணைப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்ற சந்­திப்பு தொடர்பில் கருத்து தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறப்­பினர் மனோ கணேசன், 

சஜித் பிரே­ம­தாச தலை­மையில் பரந்­து­பட்ட கூட்­டணி அமைக்­கப்­படும்.இந்தக் கூட்­ட­ணியில் ஐ.தே.க. உட்­பட ஐ.தே.மு.வின் அனைத்துக் கட்­சி­க­ளும்­இ­டம்­பெறும். புதிய கட்­சி­களும் கூட்டணியில் உள்வாங்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பிடிவாதத்தை திருத்திக்கொண்டு புதிய மாற்றங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும். ஆனால் அவரது மனமாற்றத்துக்காக நாம் காத்திருக்கப் போவதில்லை. தற்சமயம் ஐ.தே.க.வின் 55 எம்.பி.க்களும் ஐ.தே.மு.வின் 20 எம்.பி.க்களும் எமது அணியிலேயே உள்ளனர். சபாநாயகர் கரு ஜயசூரியவை உள்வாங்கும் நடவடிக்கையையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அந்த முயற்சியும் வெற்றியளிக்கும் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46