சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் பெண் உள்ளிட்ட இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று டுபாயிலிருந்து வருகைதந்த விமானமொன்றின் ஊடாக 323 சிகரெட்டுக்களை கொண்டுவந்துள்ளதாகச் சுங்க திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.  

சுமார் 38 இலட்சத்து 76 ஆயிரம் பெறுமதியான  சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கண்டி மற்றும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த  42 மற்றும் 67 வயதுடையவர்கள் என சுங்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பாக மேதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.