பபுவா நியூகினியில்  அந்நாட்டு பிரதமர் பீற்றர் ஓநீலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார்  நேற்று புதன்கிழமை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்  இந்த சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற நிலையில் அதற்கு அந்நாட்டு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்த  சம்பவத்தில்  பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாக  உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பீற்றர் ஓநீல் அவர் எதிர்கொண்டுள்ள  ஊழல் குற்றச்சாட்டுகளின் நிமித்தம் பதவி விலக  வேண்டும் என  மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிவருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து  பிரதமர் கருத்து வெ ளியிடுகையில்,   சிறிய மாணவர் குழுவொன்று வன்முறையில் இறங்கி  பொலிஸார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தயியதாகவும் அவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன் எச்சரிக்கை வேட்டுகளையும் தீர்த்ததாகவும்  கூறினார்.