இன, மத வேறு­பாட்டை தூண்டும் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இருந்து மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும் என துறை­மு­கங்கள் மற்றும் கப்பல் துறை அலு­வல்கள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.

தனது 52ஆவது பிறந்த தினத்தை முன்­னிட்டு மினு­வாங்­கொடை ரஜ­மஹா விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

நான் இன்று என்­னு­டைய பிறந்த தினத்தை கொண்­டாட வில்லை. நாங்கள் நல்­லாட்சி அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திட்­டது கடந்த டிசம்பர் 1ஆம் திக­தி­யாகும். அது எனது பிறந்த தினத்தை விடவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

சர்­வா­தி­கார ஆட்­சியில் இருந்து மக்­களை பாது­காத்­துக்­கொண்டு மக்­க­ளுக்கு சார்­பா­னதும் நாட்­டுக்கு ஏது­வா­ன­து­மான அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு முடி­யு­மா­னது எனது பிறந்த தினத்தை விடவும் முக்­கிய விட­ய­மாக கரு­து­கின்றேன். நாட்­டுக்கு தற்­போது சிறந்த இரண்டு தலை­வர்கள் இருக்­கின்­றனர்.அத­னூ­டாக இது­வ­ரை­கா­லமும் நாட்டில் இடம்­பெற்று வந்த சர்­வா­தி­கார ஆட்சி கலா­சா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வர முடி­யு­மானதாக இருக்­கின்­றது. எதிர்­கா­லத்தில் நாட்டை எத்­தி­சைக்கு கொண்டு செல்­வது? எவ்­வா­றான பொரு­ளா­தார கொள்கை அவ­சியம் போன்ற விட­யங்­களை பாரா­ளு­மன்றம் மற்றும் அமைச்­ச­ர­வைக்குள் ஆராய்ந்து வரு­கின்றோம்.

கொழும்பில் ஆரம்­பித்த என்­னு­டைய அர­சியல் பய­ணத்தை களுத்­து­றையில் இருந்து கம்­ப­ஹா­வுக்கு எடுத்து வந்தது நான் பிறந்த பிர­தே­சத்­துக்கு என்னால் முடிந்த சேவை­களை மேற்­கொள்­வ­தற்­காகும். அதற்­காக நாங்கள் அனை­வரும் கட்­சி­பே­தங்­களை மறந்து ஒன்­றாக கைகோர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இன்­றி­ருக்கும் உண்­மை­யான தலை­வர்­க­ளூ­டாக நாட்டை சிறந்­த­தொரு மாற்­றத்­துக்கு கொண்டு செல்ல வில்­லை­யென்றால், நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தூர­நோக்­கு­டைய தலை­மைகள் மீண்டும் எப்­போது உரு­வாவார்கள் என்­பது சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது. இன்று சிலர் இன, மத வேறு­பாட்டை தூண்டி விட்டு தங்களது அரசியலை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என்­றார்.