உலகில் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற நேபாள நாட்டை சேர்ந்த ககேந்திர தாபா மாகர் உயிரிழந்தார்.

27 வயதான ககேந்திர தாபா மாகர் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் வசித்து வந்தார்.

சில நாட்களாக  நிமோனியா காய்யச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் 1992ம் ஆண்டு பிறந்த ககேந்திர தாபா மாகர், வெறும் 2 அடி மட்டுமே உயரம் கொண்டவர்.

உலகில் மிகவும் குள்ளமான மனிதர் என கடந்த 2011ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண் ஜோதி ஆம்கே (25) உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.