இன்றைய வானிலை !

By Priyatharshan

18 Jan, 2020 | 07:25 AM
image

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில்சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25