பனாமாவில் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதியில் பாரிய புதைகுழியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரின் உடலை மீட்டுள்ள காவல்துறையினர் இவர்கள் பேயோட்டுபவர்களால் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

32 வயது கர்ப்பிணிப்பெண்ணையும் அவரது ஐந்து பிள்ளைகளையும் அயலவரையும் சடலமாக மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் 15 பேரை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் கொலைசெய்தனர் என்ற சந்தேகத்தில் பத்து பேரைகைதுசெய்துள்ளனர்.

 இந்த பகுதியிலிருந்து தப்பிய மூவர் உள்ளுர் மருத்துவமனையில் தஞ்சம்புகுந்ததை தொடர்ந்தே இந்த மனித புதை குழி குறித்து தெரியவந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளுர் குழுவினர் பல குடும்பங்களை பிடித்து வைத்துள்ளனர் என மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அடர்ந்த காட்டின் மத்தியில் காணப்பட்டஅந்த பகுதியை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

நாங்கள் சென்ற வேளை அவர்கள் கட்டிடமொன்றிற்குள் சடங்குகளில் ஈடுபட்டிருந்தனர்,அங்கு பலர் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர், துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருந்தனர் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் தங்கள் பாவங்களிற்காக வருந்தாவிட்டால் அவர்களை கொல்வதற்காகவே சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிமாக உருவாக்கப்பட்ட தேவாலயமொன்றிற்குள் நிர்வாணநிலையில் பெண்களையும், கத்திகளையும் பலிகொடுக்கப்பட்ட ஆட்டையும் பார்த்ததாகஅவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

கடவுளின் புதிய ஒளி என்றமதப்பிரிவினரின் கட்டுப்பாட்டிலேயே இந்த பகுதிகள் இருந்துள்ளன.

இந்த குழுவை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு கடவுளின் செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்களை கடத்தும் சித்திரவதை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

குறிப்பிட்ட குழுவினர் ஆட்களை கடத்தி கொலை செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களி;ல் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணின் தந்தை என தகவல்கள் வெளியாகியுள்ளன.