(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சின் தலைமைத்துவத்திற்கு இன்று மும்முனை போட்டி  நிலவுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் பகுதியளவில் நிராகரிக்கப்பட்ட இக்கட்சி பொதுத்தேர்தலில்  மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.

அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சி  ஒன்று பாராளுமன்றத்தில் செயற்படுவது சிறந்த ஆட்சிக்கு  சாதகமாக அமையும், ஆனால்  நடைமுறையில் பலமான எதிர்க்கட்சி ஒன்று கிடையாது.

பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநாயக்கவின்  சர்ச்சைக்குரிய குரல்  பதிவுகளின்   பின்னணியில்  இருந்தவர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.

முன்னாள்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான குழுவினராலே இவ்வாறான  முறையற்ற செயற்பாடுகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால்  அனைத்து பழிகள் அனைத்தும் ரஞ்சன் ராமநாயக்க மீது மாத்திரமே சுமத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.