(நா.தனுஜா)

பொதுத்தேர்தலில் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் களமிறங்கப்போகிறார் என்ற கேள்விக்கு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பதிலில்லை.

பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளராக யாரைக் களமிறக்கவேண்டும் என்பதைக்கூட அவர் தீர்மானிக்காமல் இருக்கின்றார்.

தற்போதைய சூழ்நிலையில் பலம் மிக்க, செயற்திறனான தீர்மானங்களை மேற்கொள்ளத்தக்க, துடிப்புடைய தலைமைத்துவமொன்றும் அதனையொத்த புதிய அணியொன்றும் கட்சிக்கு அவசியமாகிறது என்று ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.