அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை ஈரானிய மக்களிற்கு ஆதரவானவராக நடித்து அவரின் முதுகில் விசம்தோய்ந்த வாளால் குத்தும்  கோமாளி என ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மதபோதனையில் ஈடுபட்டவேளை அவர்இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் எதிரியின் முகத்தில் ஓங்கி அறைவதற்கான தெய்வீக ஆதரவு  உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை துயரமான சம்பவம் என குறிப்பிட்டுள்ள ஆன்மீக தலைவர் சொலைமானியின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமளவு மக்கள்வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை மறைப்பதற்காக  விமானம் வீழ்த்தப்பட்டதை  எதிரிகள் பயன்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலநாடுகளால் ஈரானை அடிபணியச்செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் சொலைமானியின் கோழைத்தனமாக படுகொலையின் பின்னர் இடம்பெற்ற பாரிய இறுதி ஊர்வலங்கள் ஈரானிய அரசாங்கத்திற்கான மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.