இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சம்பியன்சிப் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இரு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

குறித்த போட்டியில் விளையாடுவதற்காகவே இங்கிலாந்து அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகின்றது.

2 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் இரு பயிற்சிப் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.