நாங்கள் முற்றாக நீரில் மூழ்குவதற்குள் எங்களை காப்பாற்றுங்கள்- மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்வேண்டுகோள்

17 Jan, 2020 | 04:10 PM
image

மாலைதீவு நீரில் மூழ்கும் ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் காலநிலை மாற்றத்தை தாக்கத்திற்கு எதிராக போரிடுவதற்கான நிதியை வழங்குமாறு உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

காலநிலை மாற்றத்தினை எதிர்த்து போராடுவது சிறிய நாடுகளிற்கு இலகுவான விடயமல்ல என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சகீட் எங்களிற்கு அவசியமாகவுள்ள நிதி எங்களை வந்தடையும் போது நாங்கள் நீரில் மூழ்கியிருப்போம் என தெரிவித்துள்ளார்.

மட்ரிட்டில் டிசம்பர் மாதம் இடம்பெற்ற காலநிலை தொடர்பான ஐநா மாநாட்டில் மாலைதீவும் ஏனைய சிறிய நாடுகளும் இயற்கை அனர்த்தம் மற்றும்  காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக தங்களிற்கு புதிய நிதியுதவி அவசியம்  என வேண்டுகோள் விடுத்திருந்தன.

எனினும் இந்த நாடுகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை

எனினும் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் சிறந்த முடிவுகள் கிடைக்கலாம் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மாலைதீவின் 80 வீதமான நிலப்பரப்பு கடல்மட்டத்தை விட ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மாலைதீவு மக்கள் புயல் , கடல் மட்;டம் அதிகரிப்பு மோசமான காலநிலை  போன்ற அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.

2004 இல் ஏற்பட்ட சுனாமி உட்கட்டமைப்பு வசதிகளிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.சுனாமி காரணமாக மாலைதீவின் விமானநிலையம் பல நாட்களாக மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாலைதீவின் இரு முக்கிய தொழில்துறைகளான மீன்பிடித்துறையும் சுற்றுலாத்துறையும் கரையோர வளங்களை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன.மேலும் பெருமளவு குடியேற்றங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும்  கரையோரப்பகுதிகளிலேயே காணப்படுகின்றது.

மாலைதீவின் நூற்றிற்கும் மேற்பட்ட தீவுகள் ஏற்கனவே ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மாலைதீவு தனது கரையோரப்பகுதிகளை பாதுகாப்பதற்கு வருடந்தோறும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை  செலவுசெய்கின்றது,எனினும் மக்கள் வசிக்கும் அதன் தீவுகளை பாதுகாப்பதற்கு மாலைதீவிற்கு மேலதிகமாக 8 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது.

தீவுகளை பாதுகாப்பதற்கு நாங்கள் கடல் சுவர்களை அமைக்கவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இது செலவு மிகுந்த திட்டம் ஆனால் எங்களிற்கு இது அவசியம் என தெரிவிக்கின்றார்.

நாங்கள் அனைவரும் கடலிற்குள் இழுத்துச்செல்லப்படும் வரைகாத்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35