(நா.தனுஜா)

2025 ஆம் ஆண்டு தேர்தலில் நான் களமிறங்கப்போவதில்லை. எனவே 2023 அல்லது 2024 ஆம் ஆண்டாகும் போது கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஆராயமுடியும். தற்போது இருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்குகளும் இல்லாமல் போனால் கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவேற்படும்.

எனவே தற்போது இருப்பதைத் தக்கவைப்பதற்கும், வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்துவதற்கும் நான் தலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் விசேட பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 பேர் சஜித் பிரேமதாஸ தலைமைப்பொறுப்பை ஏற்றுச்செயற்படுவதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்