திருகோணமலையில் இன்று சீனன் குடா விமானப்படைத்தளத்தில் பயிற்சியை முடித்த விமானப்படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த கலந்துகொண்டார். 

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். 

விடுதலை புலிப்பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்லது முற்றாக அழிப்பதற்கு எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது.இலங்கையின் வடகிழக்கில் குறிப்பாக வன்னியில் விடுதலைப் புலிகளின் இலக்குகளை அழிப்பதற்கு எமது விமானப்படை பெரிதும் எமக்கு உதவியது.

இதன் மூலம் புலிகள் கைப்பற்றியிருந்த நிலங்களை மீட்கமுடிந்ததுடன் மக்களையும் காப்பாற்றமுடிந்தது.கெமரா பொருத்தப்பட்ட விமானங்களின் உளவுத் தகவல் மற்றும் தாக்குதல்கள் மூலம் விடுதலை புலிப்பயங்கரவாதிகளை எங்களால் இலகுவாகத் தோற்கடிக்கமுடிந்தது.

உலக நாடுகளில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வென்றவர்கள் எமது விமானப்படையினர்.இதன் மூலம் இந்நாட்டிற்கு அவர்கள் விடேசமானவர்கள். உலகில் உள்ள எந்த பயங்கரவாதிகளிடமும் விமானப்படை இருந்ததில்லை இதில் விடுதலைப்புலிகள் அனுபவசாலிகள் சிறியவிமானங்களைப்பயன்படுத்தி மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்த முனைந்தவர்கள்.

அந்த காலங்களில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறிம்பட்டித்தாக்குதல்கள் என குறிப்பிடுவதுண்டு.அந்த குறும்பட்டித்தாக்குதல் களை புலிகள் இரவு வேளைகளில் கரையோரமாக தாழ்ப்பறந்து வந்து மேற் கொண்டனர் அந்தக்குறிம்பட்டி தாக்குதல் மூலம் கொலன்னாவ பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம்,கட்டுநாயக்க விமான நிலையம் போன்றவற்றில் பெரும் சேதங்களை ஏற்படுத்த  முனைந்தனர் ஆனால் எமது விமானப்படை அதனை முறியடித்தனர்.

உலகின் மிகச்சிறந்த தற்கொலைத்தாக்குதல் அங்கி மற்றும் தற்கொலைத்தாக்குதல் படகுகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர் பிரபாகரன். 

அதன்    மூலமே உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் உளவுப் பிரிவான.எப்.பி.ஜ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளின் பட்டியலில் இனைத்து அவ்வியக்கத்தைத் தடைசெய்தது.அதன் அடிப்படையில் அவர்கள் அழிவினை தேடிக்கொண்டனர். இன்று உலகில் பயங்கரவாதிகளால் யுத்தங்களை ஆரம்பிப்பதன்மூலம் மக்களின் அழிக்கின்றனர்.

இன்றும் உலகில் தீவிரவாதம் அதன் அழிவுகளை மிகச்சிறப்பாகச் செய்து கொண்டு உள்ளது.குறிப்பாக மத்தியகிழக்கில் சிறியா,ஈராக் போன்ற நாடுகளில் ஜ.எஸ்.ஜ.எஸ் என்கின்ற பயங்கரவாதிகள் அழிவுகளை மேற்கொள்வதன் மூலம் மக்களைக் கொல்கின்றனர் சொத்துக்களை அழிக்கின்றனர் அந்தவகையில் எமது இராணுவத்தைக் குறிப்பாக விமானப்படையைக் குறித்து நாம் பெருமை அடைய வேண்டும்

இந்த விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு நிகழ்வு குறித்த எமது ஜனாதிபதியும் நானும் பெருமையடைகிறேன் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.