எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனித்து கூட்டணியபைப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் பெரும் இழுபறிக்கு மத்தியில் எவ்வித முடிவுகளும் இன்றி கூட்டம் நிறைவடைந்தது.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படுமென அதன் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனித்துக் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக ரணவக்க, ரவூப்ஹக்கீம் , மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோரும் சஜித் அமைக்கும் கூட்டணியில் இணையும் சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.