பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பிலேயே அவர் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.