நாவ­லப்­பிட்டி கதி­ரேசன் மத்­தி­யக்­கல்­லூ­ரியின் 14 மற்றும் 16 வய­துக்­குட்­பட்ட காற்­பந்து அணிகள் தலை­ந­கரில் விவே­கா­னந்தா மற்றும் பம்­ப­லப்­பிட்டி இந்து ஆகி­ய­வற்றில் மேற்­படி வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுடன் சிநே­கப்­பூர்வ போட்­டி­களில் மோத­வுள்­ளன. 

அந்­த­வ­கையில் நாளை சனிக்­கி­ழமை பொரளை கெம்பல் மைதா­னத்தில் மாலை 3,45 மற்றும் 4.45 ஆகிய நேரங்­களில் ஆரம்­ப­மாகும் போட்­டி­களில் முறையே நாவ­லப்­பிட்டி கதி­ரேசன்  மத்­தியக் கல்­லூ­ரியின் இரண்டு அணி­களும் கொழும்பு விவே­கா­னந்த கல்­லூ­ரியின் இரண்டு அணி­களும் மோத­வுள்­ளன. 

இத­னை­ய­டுத்து நாளை மறு­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை அதே மைதா­னத்தில்  காலை 10 மணிக்கும் 11 மணிக்கு ஆரம்­ப­மாகும்  இரண்டு போட்­டி­க­ளிலும் நாவ­லப்­பிட்டி கதி­ரே­சனம் மத்­தியக் கல்­லூரி அணிகள் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் இரு அணிகளுடன் மோதவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.