நடிகர் ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர். அவரை நான் சந்தித்தமையை பாக்கி யமா கவே கருதுகிறேன் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

கேள்வி :- ரஜனியைநீங்கள் போய் சந்தித்ததாகவும் மக்களுக்கு இத்தனைபிரச்சனைகள் இருக்கும் போது ரஜனியைபார்க்கப்போனமைதவறென்று கூறப்பட்டுள்ளதே. உங்கள் கருத்தென்ன?

பதில் :- ரஜனியை நான் சென்றுபார்த்துவந்ததுஉண்மையே. அதுஒருதனிப்பட்டவிஜயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. அசோக் வெங்கட் 11ஆம் திகதி மாலை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தபோது”ரஜனியைபபார்க்க வருகின்றீர்களா? அவரின் அலுவலகத்தில் இருந்துபேசி இன்று மாலை என்னால் சந்திப்பை உறுதிப்படுத்தமுடியும்”என்று கூறினார்.

மாலை 6 மணிக்குப் பின் என் மற்றைய சந்திப்புக்கள் முடிந்துஹோட்டலுக்குச் செல்வதாக இருந்தது. ஆகவே 6 மணிக்குப் பின்னர் என்றால் அவரைசந்திக்கமுடியும் என்றேன். அசோக் ரஜனியின் காரியதரிசியுடன் பேசி இருக்கின்றார். நான் சந்திக்கவருவதாகக் கூறப்பட்டபோது ரஜனி மகாவலிபுரத்தில் இருந்த தனது தோட்டவீட்டில் இருந்துஉடனே அவரின் போயஸ் கார்டின்ஸ் வீட்டுக்கு வருவதாகக் கூறி என்னைமாலை 06.30 மணியளவில் சந்திக்கமுடியும் என்று கூறியிருந்தார்.

நான் அங்குசென்று அவர் வீட்டின் முன்பக்கத்தில் இறங்கியதும் ஒருவர் என் கையைப் பற்றிக் கொண்டு”வாருங்க! வாருங்க! எப்படி இருக்கிறீங்க?” என்றுகேட்டார். சற்று இருட்டாக அந்த இடத்தில் இருந்தது. கூர்ந்துபார்த்தபோது ரஜனியே அங்குநின்றார்! நான் அதற்குமுன் நேரடியாக ரஜனியைச் சந்தித்ததில்லை. பலவருடகாலம் பழகியதுபோல் என் கையைப் பற்றி ரஜனிதமது இருப்பறைக்கு எம்மைஅழைத்துச் சென்றார்.

அங்குசென்றதும் பாபாஜியின் படமும், இராமகிருஷ்ண பரமஹம்சரின் படமும், யோகாநந்த பரமஹம்சரின் படமும்,எம் நாட்டுசுவாமிசச்சிதானந்தயோகியின் படமும் சுவரில் தொங்கபோட்டு இருந்தன. உடனே எங்கள் பேச்சுக்கள் ஆன்மீகப் பெரியார்கள் பற்றியும் உலகநியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள்,யதார்த்தங்கள் சார்ந்துபேசப்பட்டன. பத்திரிகைகளில் கூறுவதுபோல் நான் ரஜனியை இலங்கைக்குவருமாறுஅழைப்பேதும் விடுக்கவில்லை. சுமார் அரைமணித்தியாலநேரம் அளவளாவினோம்.

ரஜனிசம்பந்தமாகப் பலவிதகருத்துக்கள் பேசப்பட்டுவருகின்றன. நான் அவரில் நேரில் கண்டகுணாதிசயங்கள் பின்வருமாறு-

அவர் எளிமையின் சிகரம்,அவருக்குஆன்மவிசாரத்தில் அதிகநாட்டம், குழந்தைகள் போல் வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய இறுக்கந் தவிர்ந்தசுபாவம் உடையவர், அசைக்கமுடியாத இறைநம்பிக்கைஉடையவர், தாமரைமேல் நீர் போன்றவாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பவர், இயற்கையாகவே உடலில் ஒருவேகம். பேச்சிலும் அப்படித்ததான், இயற்கையாகவே அன்புநிறைந்தவர். அவரது அன்பு நடிப்பல்ல. அவரின் எளிமைச் சுபாவத்தால் வந்த நெகிழ்ச்சியே அது.

நாங்கள் இருவரும் பேசிக் கொண்டபலவற்றுள் சுவாரஸ்யமான இரு விடயங்கள் பின்வருமாறு-

”பாபா”படத்தால் பெருவெற்றியைப் பெறலாம் என்றுஎண்ணியிருந்தார் ரஜனி. அதுபடுதோல்வியடைந்தது. அப்போதுபலவிநியோகஸ்தர்கள் பலத்தநட்டம் அடையும் நிலைஏற்பட்டது. ரஜனியின் திரைவாழ்க்கை இத்துடன் முடிவடைந்துவிட்டது என்று கூட பலர் எண்ணினார்கள். தனக்கெனத் தயாரிப்பாளர்கள் கொடுப்பதாகக் கூறியபணத்தை முழுமையாகவே எடுக்காது விட்டு பல விநியோகத்தர்களையும் மற்றவர்களையும் பாரியநட்டத்தில் இருந்துகாப்பாற்றினார்.

அடுத்தபடம் பற்றிப் பேசும் போதுமுன்னையபடத்தில் அவருக்குகிடைக்கவேண்டியமுழுத்தொகையும் அந்தஅடுத்தபடத்தில் தனது ஊதியமாகத் தருமாறுகோரினார். தயாரிப்பாளர் அதிர்ந்துவிட்டார். என்றாலும் ஒருசிறுதொகையை அட்வான்ஸாகத் தருவதாகவும் மிச்சத்தைபடம் ரிலீசாகியபின் தருவதாகவும் தயாரிப்பாளர் கூறினார். ரஜனிஅதற்கிசைந்தார்.

படையப்பா என்று நினைக்கின்றேன் அந்தஅடுத்தபடம். அதுபலத்தவெற்றிப் படமாக அமைந்தது. கோரியமுழுத்தொகையும் ரஜனிக்குக் காலாகாலத்தில் கிடைத்தது.

”பாபா”படம் படுதோல்வியடைந்தது பற்றி என்னுடன் வியந்துபேசினார். ஏன் என்றுதெரியவில்லை என்றார்.

அதற்கு எனது கருத்தாகப் பின்வருமாறு கூறினேன். -”நீங்கள் பாபாஜியின் பரமபக்தர். யோகானந்தபரமஹம்சரின்பக்தர். அவர்களைக் கருப்பொருளாகவைத்துபணம் சம்பாதிப்பதை அவர்கள் விரும்பவில்லைபோலும். ஆனால் நீங்கள் அவரின் விஸ்வாசி என்ற அடிப்படையில் நீங்கள் தொடர்ந்து நட்டமடையவிடவும் அவர்கள் விரும்பவில்லைபோலும்”என்றேன்.

 ”ஆம்”என்பதுபோல் தலையசைத்தார்.

பாபாஜி இப்பொழுதும் ஒரு இளைஞராக இமாலயமலைப் பிரதேசத்தில் இருந்துவருவதைப் பற்றிநாமிருவரும் எமதுகருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

அடுத்துஎன்னைப் பற்றியஒருசிறுகுறிப்பு. அவர் தமது மாகாவலிபுர தோட்டவீட்டில் இருந்து எனக்காகத்தன் போயஸ் கார்டன் வீட்டிற்குவந்தமைபற்றியும் தன் வீட்டுப் படியிறங்கிவந்துஎன்னைஅழைத்துச் சென்றமைபற்றியும் வியந்துகுறிப்பிட்டேன். நன்றி கூறினேன்.

அப்பொழுதுஅவர் கூறினார் - ”உங்கள் முகத்தில் ஒருதேஜஸ் தெரிகின்றது. உங்கள் தாடிமுகத்திற்குப் பொருத்தமாகஅமைந்துள்ளது. உங்களைச் சந்திக்கவேண்டும் என்றுஆர்வமாக இருந்தேன். வவுனியாவில் ஒரு கூட்டத்திற்குவருவதாக இருந்தது. அப்போது சந்திக்க எதிர்பார்த்தேன்.ஆனால் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. ஆகவே நீங்கள் வருவதாக அறிந்ததும் நான் அவசரஅவசரமாக இங்குவந்தேன்”என்றார்.

”பரம ரஜனி இரசிகர்களான என் இரு மகன்மார்களும் நீங்கள் கூறியவற்றை அறிந்துகொண்டால் மிக்கமகிழ்ச்சி அடைவார்கள்” என்று கூறினேன்.

ரஜனிபந்தாவே இல்லாதமனிதர் எனக் கண்டுஉண்மையில் வியப்படைந்தேன்.

சிறியபுகழை, பதவியைஅடைந்து விட்டாலே பலர் தலைகால் தெரியாது ஆடுகின்றார்கள். பாரதம் கடந்து ஜப்பான் போன்றநாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒருதிரைப்படக் கலைஞர் என்றமுறையில் அவர் பலத்த பந்தாகாட்டுவார் என்றுஎதிர்பார்த்திருந்தேன். அவரின் மறைந்த அடுத்த வீட்டுக்காரியின் குணம் அவரிடம் சற்றும் இல்லாதிருந்ததைக் கண்டுபிரமித்தேன். எந்த ஒருமனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒருபெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன்.

அங்குபடம் எடுத்துக் கொண்டிருந்த அன்பரைப் படம் எடுத்துமுடிந்ததும் நீங்களும் வாருங்கள் என்றழைத்து அவருடன் இருந்துஒருபடம் அந்த அன்பரின் கமராவில் எடுத்துக் கொண்டார். உங்கள் கேள்விக்கு இப்போவருகின்றேன்.

அன்று ரஜனியைப் பார்க்காது இன்னொருவரைச் சந்தித்திருந்தால் இவ்வாறானகுற்றம் என்மீதுசுமத்தப்பட்டிருக்குமா? அப்பொழுதுஉங்களிடம் என் சம்பந்தமாகக்குறைகண்டு கூறியவர் ”எம் மக்களுக்கு இத்தனைபிரச்சினைகள் இருக்கும் போதுஏன் இன்று இன்னாரைச் சந்திக்கச் சென்றார்” என்றுகேட்டிருப்பாரா? ஆகவே ரஜனியைச் சென்று விக்னேஸ்வரன் சந்தித்தமைஅவர் மனதில் விசனத்தை ஏற்படுத்தவேறு காரணங்கள் இருந்திருக்கின்றன.

 முக்கியமாக அரசியல் காரணங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் இவ்வாறானகருத்தைவெளியிட்டிருப்பார் என்றுமுடிவெடுக்கஅதிகநேரம் தேவையில்லை. அவரிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். ”நீங்கள் தமிழ் மக்கள் பிரச்சனைகளில்மட்டும் சதா அமிழ்ந்திருக்கும் ஒருவர் என்றால்,வேறெந்தநாட்டமும் கொண்டவர் அல்லஎன்றால்,உங்கள் கடமைநேரம் முடிந்தபின்னர் ஒருசினிமாதானும் பார்க்காதஒருவர் என்றால் தயவுசெய்துஎங்கள் கட்சியில் சேருங்கள். உங்களைப் போன்றவிருப்புவெறுப்பற்றதெய்வீகத் தொண்டர்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம். வாருங்கள்! வந்துஎம்முடன் சேருங்கள்! மக்களுக்காகப் பாடுபடுங்கள்! என்னைப் பொறுத்தவரையில் நான் சாதாரணமானவன். உங்கள் உச்சமட்டதெய்வீகஎதிர்பார்ப்புக்களுக்குமுகம் கொடுக்கக்கூடியஒருவர் அல்லநான்.”

என்னைக் குறை கூறுபவர்கள் சிலவிடயங்களைமனதில் கொண்டிருக்கவேண்டும்.

எனதுதனிப்பட்டவிஜயத்தைஅரசியல் சந்திப்புபோன்று ஆக்கியவர்கள் பத்திரிகையாளர்கள்,நான் தற்போதுபதவியில் இல்லாதவன். ஏதோபெரியதவறைநான் இழைத்ததாகசிலர் பேசிக் கொள்வதுவிந்தையாக இருக்கின்றது, மக்களாகியநாங்கள் எம்மைப்பற்றிசிலவிடயங்களைமனதில் வைத்திருக்கவேண்டும். Man is a conditioned being என்றுதத்துவஞானிது. ஜெ கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். நாம் யாவரும் சுற்றுச் சூழலால்,படிப்பால்,அனுபவத்தால் உருமாற்றப்பட்டவர்கள். ”எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.அந்தக் குழந்தைநல்லதுகெட்டது”என்றுமேற்குறிப்பிட்ட பாதிப்புக்களால்த்தான் உருமாறுகின்றது. இதைவிடஅவர்களின் முன்னையபிறவிகளில் இருந்தும் சிலவிருப்புவெறுப்புக்களை கொண்டுவருகின்றார்கள். ஒருவர் சரிஎன்பது இன்னொருவருக்குதவறாகப்படும்.

ரஜனியை தெலுங்கன், சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்றெல்லாம் கூறுபவர்கள் அவரைச் சென்று ஒருமுறைசந்தித்துவாருங்கள் என்றுகேட்டுக் கொள்கின்றேன். அப்போது அவரிடம் உங்கள் கேள்விகளை முன்வைக்கலாம். அப்போது அவரின் உயரியபண்புகள் தெரியவரும்.

என்னையுந்தான் தெற்கில் தாறுமாறாகவிமர்சிக்கின்றார்கள். இனவாதி என்கின்றார்கள், பயங்கரவாதிஎன்கின்றார்கள். கலவரத்தை உண்டாக்கஎத்தனிக்கும் ஓர் கயவன் என்றெல்லாம் கூறுகின்றார்கள். அதைச் சரி என்று வடக்கில் உள்ளவர்கள் கூறுவார்களா? ஒவ்வொருவர் பார்வையில்த்தான் வெளிஉலகம் அவர்களுக்கு தென்படுகின்றது.

சிலர் நான் நீதியரசராக இருந்தவர்,ஒருசினிமாக் காரரைச் சென்றுசந்தித்தது தவறுஎன்று கூறுகின்றார்கள். நாளை ரஜனி பண்டாரவன்னியனைத் திரையில் சித்திரித்தால் அப்போதும் அவரைதிரைக் கூத்தாடிஎன்றுதான் கூறுவீர்களா?

ரஜனியைச் சந்தித்ததால் அவரின் உயரியகுணங்களைநான் அறிந்துகொண்டேன். அவருடன் எம்முடையசந்திப்பு முடிந்ததும் தானே என்னுடன் வந்துநான் ஏறியதும் என் கார் கதவைச் சாத்தி வழி அனுப்பிவைத்தார். அந்தச் சிறந்தமனிதரின் அறிமுகத்தை,சந்திப்பைஒருபாக்கியமாகக் கருதுகின்றேன்.