திருகோணமலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனிற்றி நேற்று இரவு  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை - இலிங்க நகர்ப் பகுதியைச் சேர்ந்த  32 வயதான பீ. சத்தியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் டெங்குகாய்ச்சல் காரணமாகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பெண்ணின் சடலம்  திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களும் ஒப்படைக்கப்பட உள்ளதா  கவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.