வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் செலுத்திய 36 சாரதிகளிற்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள விபத்துக்களைக் கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ்குழுவினர் வாரத்திற்கு ஒருநாள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்றையதினம் வவுனியா ஏ 9 வீதியில் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , அபாயமான முறையில் வாகனம் செலுத்தியமை , வாகனம் செலுத்தும் போது தொலைப்பேசி பயன்படுத்தியமை, போதையில் வாகனம் செலுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 36 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அவற்றில் 6 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்குத் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைப் பாதசாரிகள் மற்றும் வாகனசாரதிகளிற்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக தெளிவூட்டல்களையும் பொலிஸார் வழங்கியிருந்தனர்.
குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுமெனவும் விபத்துக்களைக் குறைக்கவும், சாரதிகள் வீதி ஒழுங்கு முறைகளைப் பின்பற்றிச் சிறப்பான பயணத்தை மேற்கொள்ளவுமே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM