சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டுமென்ற பிரேரணை 52:0 என நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐ. தே. க. வின் உறுப்பினர்கள் சந்திப்பில், சஜித் பிரேமதாஸவை அக்கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு வாக்கெடுப்பு நடாத்த தீர்மானிக்கப்பட்டபோது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின்னர் மீதமான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், 52:0 என்ற அடிப்படையில்,  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கட்சியின் யாப்பின் பிரகாரம் மேற்படி அறிவிப்பை எதிர்வரும் தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஐ. தே. க. வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 24.01.2020) மேற்கொள்ளப்படுமென அக்கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.